Monday, 6 June 2011


ஒரு வரி கதை கிடைத்தாலே அதை பதினாலு ரீலுக்கு படமாக எடுத்து தள்ளும் இயக்குனர்கள், கூடி கூடி பேசுவதை Bharathirajaபார்த்தால் சுவாரஸ்யமான ஒரு ஆக்ஷன் படம் தேறும் போலிருக்கிறது! வேறொன்றுமில்லை, வருகிற 20 ந் தேதி இயக்குனர்கள் சங்கத்திற்கு தேர்தல். இதுவரை சங்கத்தின் பக்கம் மழைக்கு கூட ஒதுங்காத ஆட்கள் எல்லாம் நாற்காலி ஆசையில் நாக்கு நீர் வழிய அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பாரதிராஜா-செல்வமணி தலைமையில் ஒரு அணியும், உதவி இயக்குனர்கள் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது.
இந்த முறை மும்முனை போட்டி வரும் போல தெரிகிறது. (சொல்ல மறந்தாச்சு. ஆர்.சுந்தர்ராஜனும் ஒரு அணியாக நிற்கிறாராம். அப்ப நாலு) அதிலும் பாரதிராஜாவை பார்த்துதான் சினிமாவுக்கே வந்தோம். எங்கள் ஞான தகப்பனே அவர்தான் என்று வார்த்தைக்கு வார்த்தை லட்சார்ச்சனை செய்த அமீர் சேரன் இருவரும் ஓரணியில் திரண்டு அவரை எதிர்க்கிறார்களாம். இந்த தேனி தமிழன் வேணாம்னாலும் விட்றாங்களாய்யா என்று இங்கிலீஷிலேயே அலுத்துக் கொண்ட பாரதிராஜாவும் இந்த முறை விட்டேனா பார் என்று களத்தில் குதிக்கப் போகிறார். அவருக்கு முழு சப்போர்ட் ஆர்.கே.செல்வமணி.
இது போக உதவி இயக்குனர்கள் கோஷ்டி ஒன்றும் களம் இறங்குகிறது. இந்த அணிக்கு புதிய அலைகள் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பெரும் பலம் வாய்ந்த திமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த விஜயகாந்தின் தேமுதிக மாதிரி, இவர்களின் செல்வாக்கும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்...

No comments:

Post a Comment