COURTESY : WWW.TAMILCINEMA.COM
ஆர்.சுந்தரராஜன் பொருளாளராகவும் பதிவி வகித்து வந்த இயக்குனர் சங்கத்தின் செயற்குழு டி40 என்ற நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. இந்த விழாவின் சாட்டிலைட் உரிமையை 2.60 கோடி கொடுத்து வாங்கியதாம் சன் டிவி. ஆனால் தற்போது இந்தத் தொகையில் 1.60 கோடி மட்டுமே சங்கத்தின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியாக உள்ளதாம். மீதி 1 கோடி ரூபாயை டி 40 விழாவின் செலவுக்கணக்காக காட்டுவாதாகவும், இதனால் பொருளாளர் ஆர்.சுந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துகான தேர்தல் வருகிற 19- ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் மொத்தம் மூன்று அணிகள் போட்டியிட இருப்பது இயக்குனர் சங்கத்தேர்தலை ரனகளமாக்கி இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டி போட இயக்குநர் சீமானை பலரும் வற்புறுத்தியதாகவும், ஆனால் பாரதிராஜாவை 'அப்பா' என அன்போடு அழைத்து மரியாதை செய்யும் தான், அவரை எதிர்ப் போட்டியிடுவது தன்னால் முடியாது என நழுவிக் கொண்ட நிலையில், இயக்குநர் அமீர் எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
சங்கத்தின் செயலாளர் பதவிக்கு இயக்குநர் பாரதிராஜா அணியில் உள்ள தற்போதைய செயலாளர் ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு எழிலும் போட்டியிடுகிறார்கள். இயக்குநர் அமீர் அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு இயக்குனர் சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார். இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இது இவ்வாறாக இருக்க இம்முறை தேர்தலில் புதிய அணி ஒன்றும் களம் காண இருக்கிறது. 'புதிய அலைகள்' எனப் பெயர் வைத்து, அணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது உதவிய இயக்குனர்களின் அணி. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் உதவி இயக்குனர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் போடும் ஓட்டுகளே முக்கிய பதவிகளை தீர்மாணிக்கின்றன. ஆனால் அவர்களுக்குரிய சம்பளத்தைக் கூட சங்கம் ஒழுங்காக பெற்றுத்தருவதில்லை என்கிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைக்குள் பணிபுரியும் பலநூறு உதவி இயக்குனர்களின் தொழில் நிலையும், வாழ்நிலையும் துயர் நிறைந்ததுதான். ஆனாலும் துறைசார் அங்கீகாரம் ஒன்றின் தேவைக்காக, பல்வேறு அவமானங்களையும், பணிக்கான ஊதியத்தினையும் ஒழுங்காகப் பெற முடியாதவர்களாக இருப்பதுதான் இன்று வரை உதவி இயக்குனர்களின் நிலை. இயக்குனர் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்களில் வரும், இயக்குனர்கள் பலரும், ஒரு காலத்தில் தாம் இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதையே மறந்து, தமக்கு ஆதரவான சில உதவி இயக்குனர்களை செயற்குழு உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு, தமது எண்ணப் போக்கிலேயே செயற்படுவதால், உதவி இயக்குனர்களின் உண்மைக் குரல் வெளிப்படுவதில்லையாம். இதனால் இம்முறை தேர்தலில் புதிய மூன்றாவது அணி போல தேர்தல் களத்தில் இறங்கும் உதவி இயக்குனர்கள், தேர்தலிலும் செயற்குழு உறுப்பினர் பதவிகளையே குறி வைத்துப் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
பல இயக்குநர்களின் புதிய சிந்தனைகளுக்கு அடிநாதமாக இருக்கக் கூடிய உதவி இயக்குனர்கள், தங்கள் அணிக்கு புதிய அலைகள் என்று பெயர் வைத்து இருப்பதிலும், அவர்களின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. பிரெஞ்சு சினிமாவில் புதிய தாக்கத்தினை ஏற்படுத்திய 'புதிய அலை' யின் குறியீடாக இந்தப் பெயரைத் தெரிவு செய்துள்ளதாகவும், சீமானின் உதவி இயக்குனர்களில் ஒருவரே இந்த அணிக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாகவும், நடைபெறவுள்ள இயக்குநர் சங்கத் தேர்தல், புதிய மாற்றங்களைத் தரும் எனவும் உதவி இயக்குனர்கள் அணி வென்றால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

No comments:
Post a Comment